மனித உயிர்களை இயக்குவதும் எண்ணங்களை சிந்திக்க வைப்பதும் இறை தானே? (அதனால் எல்லாவற்றிற்கும் இறை தானே பொறுப்பு!
அது எப்படி அப்பா? அமிர்தமும் அரளிக் கொட்டையும் எதிரே இருக்கும் போது அரளிக்கொட்டை விஷம் என்ற அறிவு மட்டும் எவ்வாறு மனிதனுக்கு வருகிறது? தனக்கு சாதகமாக இருக்கும் போது மதியையும் சாதகம் இல்லாதபோது விதியையும் காரணம் காட்டி விடுவான் மனிதன். அடுத்தவனின் வெற்றிக்கு அதிர்ஷ்டத்தை காரணமாகக் கூறி விடுவான். எனவே நன்றாக புரிந்து கொள்! நவக்கிரகமோ, முனிவர்களோ, தெய்வமோ ஒரு உயிரை கண்ணீர் சிந்த வைப்பதால் அவர்கள் என்ன லாபம் அடையப் போகிறார்கள். அல்லது ஒரு மனிதன் சுகித்து வாழ்ந்தால் அவர்களுக்கு என்ன பயன்? விதியை இறைவன் படைக்கவில்லை அந்த மனிதனே விதியை நிர்ணயம் செய்து கொள்கிறான். அப்படிப் பார்த்தால் ஒரு ஆன்மா தன்னுடைய முதல் பிறவியிலே ஒரு தேவனாகவோ அல்லது முனிவராக இருந்தாலும் கூட ஏதோ ஒரு சாபத்தினால் மனிதனாக பிறக்கும் போது இறைவன் கருணை கொண்டு அந்த ஆன்மாவிற்கு உயர் ஞானம் செல்வம் அளித்து எவ்வித கஷ்டமும் இல்லாத பிறவியை தான் தருகிறார். ஆனால் அவனோ மாயையில் சிக்கி தவறு மேல் தவறு செய்து, பாவங்கள் செய்து, சறுக்கி விழுபவன், மீண்டும் எழுவதே இல்லை. ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வோடு எது மாயை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!