பெங்களூர் வாக்குகள் குருநாதர் நல் உபதேசங்கள் பாகம் 2
விதியை மாற்றி அருள் நிறைந்த வாழ்க்கைக்கு சித்தர்களின் வழிகாட்டல்!!!!!
அப்பனே யான் சொல்லிய ஔஷதங்களை எடுத்து வர வேண்டும் அப்பனே நிச்சயம்!!!!
மனிதர்கள் செயற்கை உணவுகளை உண்டு உண்டு அப்பனே உடம்பில் உள்ள அழுக்குகள் தங்கி!! தங்கி!!!
அதை வெளியேற்றி விட்டால் நலன்கள் ஆகும்!!நிச்சயம் மாறும் வாழ்ந்து விடலாம் அப்பனே!!!
அறிந்தும் ஏன் எதற்கு எவை என்று புரியாமல் நிச்சயம் பல மனிதர்கள் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள்... ஆனாலும் எங்களை தேடி வந்துவிட்டால் அவர்கள் நலனை யாங்கள் பார்த்துக் கொள்வோம்!!!
இதனால் அறிந்தும் கூட விதியையும் கூட கடுமையான போராட்டங்கள் மனக்குழப்பங்கள் அறிந்தும் கூட ஏன் இந்த வாழ்க்கை???? என்றெல்லாம்!!!!
பின் பிரம்மா எதை என்று அறிய அறிய தலை விதி என்கின்றார்களே பின் எழுதி அழகாக அனுப்பி வைத்து விடுகின்றான்!!!!!
அதனால் விதியை மாற்றுவது சுலபம் இல்லை தாயே !!!! பொறுத்திருந்தால் யானே மாற்றுகின்றேன்!!!!
(விதியை மாற்றுவதற்கான வழியையும் குருநாதர் ஏற்கனவே கூறி இருக்கின்றார் குருநாதர் கூறிய திருத்தலங்கள் செல்ல வேண்டும்!!! தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்)
அறிந்தும் எதை என்று அறிய அறிய இதனால் பல வழிகளில் இன்னும் சொல்லுகின்றேன் விளக்கமாக அறிந்தும் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இதனால் பல பல வழிகளில் கூட இப்படித்தான் மனிதன் திரிந்து திரிந்து வருகின்றான்!!! வருந்துகின்றான் !!! அப்பனே
ஆனாலும் அவந்தனுக்கு தெரியவில்லை!!!!
எத் திருத்தலத்திற்கு சென்றால் பின் எவை என்று கூட பின் நாடிச் சென்றால் விதி மாறுமா என்று!!!!
பின் நிச்சயம் மாறுவதில்லை!!! இதனால்தான் இறைவனை எதை என்று அறிய அறிய இறைவன் அருகிலே சென்று சென்று பின் மனக்குழப்பத்தை எவை என்று அறியாமலும் எவை என்றும் புரியாமலும் கூட பின் பின் இறைவனிடம் இவ்வளவு பக்திகள் செலுத்தினோமே... என்றெல்லாம் !!!!......
நிச்சயம் அறிந்தும் கூட எதை என்றும் கூட பொருட்படுத்தாமல் நிச்சயம் பின் இறைவன் நம் தனக்கு உதவிகள் செய்யவில்லையே என்றெல்லாம் அறிந்தும் கூட
இதனால் விதியில் என்ன?? உள்ளது?? என்பதை ஆராய்ந்து சரியாகவே பின் அறிந்தும் அறிந்தும் சென்றால் நிச்சயம் வெற்றி ஆகும்
அவ் விதியை எங்களால் மட்டுமே கணிக்க முடியும் நலன்கள் ஆசிகள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!