[சித்தன் அருளை தொடரும் முன் ஒரு சிறு விண்ணப்பம். யார் யாராயினும், அவர்களுக்கு சித்தன் அருளால் ஏதேனும் நல்ல அனுபவம் கிடைத்திருந்தால், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இருப்பின், sgnkpk@gmail.com க்கு அனுப்பித் தரவும். உங்கள் அனுமதியுடன் "சித்தன் அருள்"தொகுப்பில் ஊர், பெயருடன் வெளியிடுகிறேன். ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் என்பது அவருக்கே உரியதாயினும், அதை மனம் உவந்து பகிர்ந்து கொள்வதினால், அது பிறருக்கு ஒரு பாடமாக அமையலாம். அதை வாசித்து யார் வாழ்க்கை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பது சித்த பெருமக்களுக்கே வெளிச்சம். இந்த சமூகத்துக்கு நம்மால் முடிந்த ஒரு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். விருப்பமுள்ளவர் பங்கு பெறலாம். ஆங்கிலத்தில் அனுப்பித் தந்தாலும், தமிழில் தட்டச்சு செய்துதான் வெளியிடப்படும். அதை அடியேன் பார்த்துக்கொள்கிறேன். இனி சித்தன் அருளை தொடருவோம்]
அருமையான காட்சி. யாருக்கும் கிடைக்காத காட்சி. அதோ ஜமதக்னி வணங்கிவிட்டு செல்கிறார். பாதரசத்தை பூமியில் கொண்டு வந்து, அந்த பாதரசத்தை உதகநீரில் வைத்துவிட்டு, அதிலிருந்து ஒரு உருண்டை தருவித்து, அதை சித்தர்களுக்கு எல்லாம் கொடுத்து, அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிற ஜமதக்னி, இன்று பாதரசத்துடன் தான் வந்திருக்கிறார். அவரும் தன் கைங்கர்யத்தை எல்லா சித்தருக்கும், என் பின்னாடி நிற்கின்ற 17 சித்தர்களுக்கும் தன் கைப்பட கொடுக்கிறார். இந்த சித்தர்கள் அதை சாப்பிட்டால் மேலும் 400 ஆண்டுகள் உலாவருவார்கள். அந்த பாக்கியமும், நிகழ்ச்சிகூட இன்று இங்கு நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய காட்சி. கல்யாண காட்ச்சியில் கல்யாணம் மட்டும் தான் நடக்கும். இந்த நம்பி கோயிலில் நடக்கிற காட்சிகள், அகத்தியன் வரச்சொன்னேன். அது ஒன்று தான். ஆனால் என்ன நடக்கிறது என்று சொல்லவேண்டாமா? எதற்காக உங்களை வரவழைத்தேன் என்று சொல்லவேண்டாமா. ஆக, அதை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அடுத்தது கேட்கலாம். எனக்கு என்ன? அவர்களுக்கு பாதரசம் கொடுத்தது போல் எனக்கு பாதரசம் கிடைக்குமா? எண்ணம் வரலாம். தவறில்லை. நீங்கள் மனித சித்தர்களாய் இருப்பதினால், உங்களுக்கு இனியும் மங்களமான செய்திகள் எல்லாம் நடக்கப்போகிறது. இன்றுகூட, சற்று முன் சொன்னேனே. இதுவரை வாழ்ந்ததெல்லாம் வாழ்க்கை அல்ல, இனி வாழப் போவதுதான் வாழ்க்கை என்று சொன்னேனே. அதுதான். இன்று ஒரு புதிய அத்யாயம் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் குடும்பம் மட்டுமல்ல, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், படுத்தால் தூங்கவும், மன நிம்மதியோடும், சகலவித சௌபாக்கியங்களோடும் அத்தனை பேர்களும் வாழப்போகிறீர்கள்.
அது மட்டுமல்ல. போகன் இருக்கிறான். அவன் அவ்வளவு அற்புதமான மருந்துகளை எழுதி வைத்திருக்கிறான். கால காலத்துக்கும் கிடைக்காத மருந்துகள். ஆகவே அன்றைக்கே சொன்னேன். இறைவன் எப்போழுதுக் எப்பொழுது நோயை கொடுத்தானோ, அப்பொழுதைக்கு அப்பொழுது நோயை குணப்படுத்தும் மூலிகையையும் கொடுத்திருக்கிறான். யாம் நேரமே உரைத்தபடி, வைத்தீஸ்வரன் கோவில் கல்வெட்டில் இருக்கிறபடி 4418 நோய்களும் உடம்புக்கு வரும். அந்த 4418 நோய்களுக்கும் அற்புதமான மருந்தை எழுதி வைத்த போகன் அருகிலிருக்கிறான். அவன் கைப்பட எழுதிய வாசகங்கள் இதோ பக்கத்திலே இருக்கிறது. எனக்கு இடது பக்கத்திலிருக்கும் அன்னவன், அந்த ஏட்டை கொண்டு போய் ஆராதனை செய்து வரட்டும்.
இப்பொழுது வ்ருக்ஷ சாஸ்த்திரத்துக்கு வருகிறேன். 27 நட்சத்திரத்துக்கும் 27 மரங்கள் உண்டடா! அகத்தியன் இன்று இவர்களுக்கு அளிக்கின்ற அற்புதமான காணிக்கை இது. ஒவ்வொரு நட்சத்திர மரங்களுக்கும் ஒவ்வொரு நோயை குணப்படுத்துகிற தன்மை உண்டு. உயிர் காக்கின்ற மரம் கூட, இவர்கள் என்னவோ சொல்லுகிறார்களே ஆங்கிலத்தில், எய்ட்ஸ் என்று, அதெயெல்லாம் போக்குகிற மரங்கள் கூட இருக்கிறது. அதை ஒன்பது நாள் கழித்து, என்னென்ன நட்சத்திரங்களுக்கு என்னென்ன மரங்கள் உண்டு என்று பட்டியல் போட்டுத் தருகிறேன். அந்தந்த நட்சத்திரத்துக்கு உடைய மரங்களை இவன் கண்டு, 3க்கு 3 என்கிற விதத்தில் வெட்டி எடுத்து அதை ஒன்று சேர்த்து கஷாயமாக்கி, வேப்ப மரப்பொந்தில் 40 நாட்கள் வைத்துவிட்டு, அதை குறுக்கி வடிகட்டி, அதை ஒரு சொட்டு எல்லோருக்கும் கொடுத்து வந்தால், எல்லா நோயும் தீர்ந்துவிடும். கண் நோய். கண் பார்வை இல்லாதவன் பார்வை பெறுவான், எவனுக்கு சிறுநீரகம் பாதித்தால், கணையம் பாதித்தால் அது மறுபடியும் சரியாக ஒட்டிக்கொள்ளும், வாழ்க்கையில், மிக கொடிய நோய் என்று சொல்லக்கூடிய புற்று நோய் இருந்தாலும், அவன் இறக்கும் தருவாயில் இருந்தாலும், எழுந்து உட்கார்ந்து கொள்வான். இது வைத்திய சாஸ்த்திரத்தில் மிக முக்கியமான அம்சம். அதை சொல்வதற்கு முன்பு 27 நட்சத்திர மரங்களை பற்றி சொல்லவேண்டும். 27 நட்சத்திர மரங்களை மட்டும் சொன்னால் போதாது, அந்த மரங்கள் எங்கெங்கே இருக்கிறது என்று சொல்லவேண்டும். அந்த மரத்தின் தன்மையும், வளர்ச்சியை பற்றி சொல்லவேண்டும். அது எத்தனை ஆண்டு மரமாக இருந்தால், எங்கிருந்து வெட்ட வேண்டும் என்பதையும் சொல்லவேண்டும். அதை எல்லாம் அந்த போகர் சாஸ்த்திரத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறான். அன்னவன், இந்த புனிதமான இடத்தில், நம்பி மலையில் பெற்றுக் கொள்ளட்டும். அதை வைத்து பூசை பண்ணட்டும். 9வது நாள், அகத்தியன் மைந்தன் வழி அந்த நட்சத்திர மரங்களை பற்றி சொல்லுகிறேன். அதற்குள் தான் எல்லாமே அடக்கமடா.
போகன் நாடி மேல் போகனே கை வைத்து சொன்னதால், இந்த நீண்ட ஓலையை அகத்தியன் வாசிக்கிறேன். ஏன் என்றால், போகன் வந்து தான் சொல்லவேண்டும் என்பதல்ல. போகன் என்னை மீறி ஏதும் செய்யமாட்டான். அவன் இரு கை நீட்டி உத்தரவு கொடுத்துவிட்டான். அதனால் தான் அன்னவனை இங்கு வரச்சொன்னேன். அந்த ஓலை சுவடியை அன்னவன் எடுத்துக் கொள்ளட்டும். தினமும் பூசை செய்து வரட்டும். 9வது நாள் அகத்தியன் 27 நட்சத்திர மரங்களை சொல்வேன், 27 மர பட்டைகளை சொல்வேன். அதை எப்படி பக்குவப்படுத்த வேண்டும் என்பதையும் சொல்வேன். அந்த பக்குவத்தில் செய்து வைத்துக் கொண்டு, வருகிற பேர்களுக்கெல்லாம், ஒரு சொட்டு அல்லது 2 சொட்டு கையிலே கொடுத்தால் போதுமடா. உயிர் காக்கும் மருந்து போல் இது தவிர வேறேதுமில்லை.
முக்கண்ணனிடமும் அனுமதி கேட்கிறேன். இந்த போகர் மருந்தை யார் யார் உண்ணுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் மரணத்தை உண்டு பண்ணாதே. அது தான் இன்றைக்கு அகத்தியன் வைக்கின்ற கோரிக்கை. அதைத் தான் முக்கண்ணனிடம் சொல்லுகிறேன். அவனும் புன்முறுவலோடு தலையாட்டுகிறான். ஆக, முக்கண்ணனின் சம்மதத்தை வாங்கிக்கொண்டு சொல்லியிருக்கிறேன். ஆக, போகனின் பாடல்களில் உள்ள ரகசியங்களை படித்துவிட்டால், இவன் உலகத்தில் எந்த முலைக்கும் வாய் திறந்து சொன்னால் போதும். நோய் குணமாகிவிடும். அந்த தகுதியை, இந்த புண்ணிய பூமியில் நின்று, கங்கை குளித்து புனிதமான நதிக்கரை ஓரம் நின்று அகத்தியன் யான் உரைக்கிறேன்.
உச்சிமுதல் உள்ளங்கால் வரை என்னென்ன வியாதி வரும் என்று அகத்தியனால் சொல்ல முடியும். அதற்கு முன்பாக ஒரு சின்ன விஷயத்தை சொல்லுகிறேன். யார் யாருக்கு எந்த நோய் இருந்தாலும் ஒன்றை செய்யட்டும். இவன் கொடுக்கின்ற மருந்திலே, யானை பல்லை எடுத்து, அந்த மருந்துடன் இந்த புனிதமான நீரை விட்டு, அந்த யானை பல்லை தேய்த்து கொடுத்துவா. நரம்பு தளர்ச்சி, எலும்பு தளர்ச்சி, மூளை தளர்ச்சி எல்லாம் விலகிவிடும்.
ஒரு பக்கம் தலைவலியை "மைக்ரேன்"என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்களே, அகத்தியன் யாம் அறியேன். ஒருபக்க தலைவலியால் அவதிப்படுகின்ற அத்தனை பேர்களும் சுக்கு, மிளகு, திப்பிலியுடன் விரளி மஞ்சள் சேர்த்து கசக்கி எடுத்து, யானை பல்லை வைத்து நீர் விட்டு தேய்த்து, நெற்றியில் மூன்று நாட்களுக்கு பத்து போட்டு வந்தால், மூன்றே நாளில் அந்த ஒற்றைத்தலைவலி அவனை விட்டு போய்விடும். கூப்பிட்டாலும் திரும்ப வராது. ஏன் என்றால், சிறு மூளைக்கும், பெரு மூளைக்கும் இடையிலே தங்கியிருக்கும் நீரை எல்லாம், யானை பல்லோடு இந்த மருந்துகள், உறுஞ்சி எடுத்துவிடுவதால் ஒற்றை தலைவலி வருவதில்லை. இதயத்தில் ஓட்டையா! அஞ்சிடாதே! வ்ருஷ சாஸ்திரத்தில் மருந்திருக்கிறது.
ஏற்கனவே எக்கி மரத்தை பற்றி சொன்னேன். எக்கி மரத்தின் காய், வேர்கள் அற்புதமாக பலன் கொடுக்கப் போகிறது. ஒரு உயிரை காப்பாற்றும் போது, அந்த உயிரை கொண்டு ஏகப்பட்ட உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அகத்தியனின் நோக்கம். அந்த உயிர் எழுந்து நடக்க முடியாமல் இருந்தால், அதை காப்பாற்றி அதன் வழியாக பல உயிர்கள் காப்பாற்ற படவேண்டும் என்பதற்காகத்தான் அந்த குழந்தை ஒரு காரணமாக இருக்கிறது. ஆகவே, அந்த குழந்தையை உட்கார வைத்தது கஷ்டப்படுத்துவதற்காக அல்ல. அந்த குழந்தை எழுந்து நடப்பது நிச்சயம். அந்த குழந்தையை வைத்துதான் ஆராய்ச்சி பண்ண வேண்டியிருப்பதால், உலகமக்கள் யாருமே, சிறு குழந்தைகள் யாருமே, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட யாருமே, மிக கொடிய நோயால் பாதிக்கப்பட்ட யாருமே. மூளையால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே, அந்த பொல்லாத நோயிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதர்க்ககத்தான் அந்த குழந்தையை கருவியாக வைத்துக் கொண்டு இத்தனை நாடகங்களை இறைவன் ஆடியிருக்கிறான். அந்த குழந்தை எழுந்து நடக்கும். அதற்கு முன்பே இந்த மருந்து கிடைக்கும். அந்த மருந்தை அந்த குழந்தைக்கு கொடுத்தால், மங்களமாக எழுந்து நடக்கும். கண்கொள்ள நடக்கின்ற காட்ச்சியைத்தான் அகத்தியன் சொல்லுகின்றேன். இதுபோல மிகப் பெரிய செய்திகள் வரப்போகிறது. அதை எல்லாம் பட்டியல் இட்டு வைத்துக் கொண்டாலே போதும். பின் காலத்தில் மிகப்பெரிய மருத்துவ சாஸ்த்திறத்தையே உண்டாக்க முடியும். யாருக்கும் கிடைக்காத ரகசியத்தை எல்லாம் சொல்லித்தருகிறேன். எல்லாவற்றையும் அகத்தியன் சொல்ல முடியாது, சொல்லக்கூடாது என்ற சட்டம் இருந்தாலும், உயிர் காக்கும் நபர்களுக்கெல்லாம் இந்த உதவியை செய்யாவிட்டால் அகத்தியன் இருந்து என்ன பயன். தலையாய சித்தன் என்று நடமாடி என்ன பயன். சற்று முன் சொன்னேனே "இவர்களுக்கெல்லாம் எந்த விதத்தில் நன்றி கடன் தீர்க்கப் போகிறேன் என்று சொன்னேனே", அந்த நன்றிக்காகத்தான் இத்தனை விஷயங்களை சொல்லுகின்றேன். ஆக, இங்கு வரச் சொன்னதற்கு என்ன காரணம் என்று அவரவர்கள் ஏதேதோ கற்பனை கூட பண்ணியிருக்கலாம்.
ஆக அருமையான நாள். ஆனந்தமான நாள். புண்ணிய நதியோரம். சற்று முன்னே சொன்னேனே. விண்ணிலிருந்து விழுகின்ற ஒரு துளிக்கு ஓடி வந்தாயே என்று. விண்ணிலிருந்து மழையா பெய்கிறது. ஏனடா! இவன் செய்ததில் நல்ல எண்ணம் இருந்தாலும், மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். நீங்கள் எல்லாம் எப்பொழுதுதான் திருந்தப் போகிறீர்கள். எனக்கே ஏதும் புரியவில்லை. வாழ்க்கையை நின்று ஜெயிக்கவேண்டும்.
ஆங்கொரு நாள், பல முறை, கொட்டுகின்ற பனியிலும், மழை நீரிலும் தவம் பண்ணியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஆக அந்த தவத்தில் நீங்கள் எல்லோரும் அமர்ந்திருக்க வேண்டாமா? ஓலைக் கட்டு நனைந்தால் என்ன, அகத்தியன் வாய் திறந்து சொல்லமாட்டேனா! வேறு ஒலைக்கட்டுக்குள் நுழைந்து அகத்தியன் பேசமாட்டேனா. போகரின் ஓலை கட்டுக்குள் நுழைந்து அகத்தியன் வாய் திறந்து பேச மாட்டேனா? ஏன் இந்த பதட்டம். அவ்வப்போது குட்டத்தான் செய்வேன். வாங்கிக் கொள்ளட்டும். வேறு வழியே இல்லை.
அது விண்ணிலிருந்து கிடைத்த ஆசிர்வாதமடா. உங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம். வருகிற புண்ணியத்தை வேண்டாம் என்று ஒதுங்கினால் எப்படி. ஆகவே அது இயற்க்கை கொடுப்பது. சற்று முன் அகத்தியர் மைந்தன் மலை ஏறும் போது, மூச்சு திணறியது போல் அவதிப்பட்டது உங்களுகெல்லாம் தெரியும். அவன் நெருங்கிய நண்பன் ஒருவன் உயிருக்கு போராடி ஆங்கோர் மருத்துவமனையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவன் உயிர் காக்க இவன் போயிருந்தான் என்பது தான் உண்மை. ஆகவே, அகத்தியன் மைந்தனுக்கு ஏதுமில்லை. அது வெளி வேஷமே என்பது யாருக்கும் தெரியாது. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவன் கூடு விட்டு கூடு பாய்ந்தவன், போகன் அருளால், கோரக்கர் துணையால், ராமதேவர் துணையால். அன்றொருநாள் ஒற்றை பாதத்தில் நடந்து வந்தானே, திருவண்ணாமலையில், அந்த திருமூலந்தான் இத்தனை நேரம் இருந்தான். இவன் கூடு விட்டு கூடு பாய்ந்து இருக்கிறான். ஆகவே, அவனுக்கு எந்த வித ஆபத்தும் வராது. ஆனாலும், அடைகாக்கும் பறவை போல், இருவரும் வந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். மனிதர்கள் எத்தனை விதமான வடிவங்கள். பாதுகாப்பின் மேலால் அவனை அரவணைத்துக் கொண்டு நடந்து வந்ததை கண்டு ஆனந்தப்பட்டேன். ஏன் என்றால் உன்னை அழைத்து வந்ததெல்லாம் சித்தர்கள் தானே. இவர்களை அழைத்து வந்ததெல்லாம் இந்த அகத்தியன் தானே. உங்களை எல்லாம் கை தூக்கி விட்டு அழைத்து வந்தது அகத்தியன் போல என் அருமை சித்தர்கள் தானே. எந்த ஒரு இடர்பாடும் உங்களுக்கு கொடுத்து விடுவேனா? இது போன்ற காரியங்கள் நடந்திருக்கிறது. இன்னும் நடக்கும்.
ஆக உங்களை அழைத்து வந்ததற்கான காரணத்தை சொன்னேன். கங்கை நதி தன் பாபத்தை போக்க, குளித்த நாள் இந்நாள். அந்த அருவிக்கரையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு அவள் சொல்கிறாள், கங்கையின் புண்ணியம் அத்தனையும் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் கங்கையில் நீராடுகிறீர்களோ இல்லையோ, நீராடும் பாக்கியம் உண்டோ இல்லையோ இன்றே நீராடிவிட்டீர்கள். சற்று முன் வானிலிருந்து விழுந்த துளி எல்லாம் கங்கை நீரே. இதை முன்னரே சொல்லியிருந்தால் கொட்டும் மழையிலும் கட்டாயம் நனைந்திருப்பீர்கள். அகத்தியன் சொல்ல மாட்டேன். உங்கள் போக்கை பார்த்துக்கொண்டு பின்னாடி தான் உரைப்பேன். அது தான் அகத்தியன் வழக்கம். அதனால், அகத்தியனையும் திருத்தமுடியாது. உங்களையும் திருத்தமுடியாது. அகத்தியன் மனம் விட்டு பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. இது போல இருமுறையோ, ஒரு ஆண்டுக்கு ஒருமுறையோ மலை பாங்கான புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லவேண்டும். அங்கு உறையும் சித்தர்கள் எல்லாம் உங்களுக்கு வாழ்த்து கொடுக்க தயாராயிருக்கிறார்கள். ஆசிகளை பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள். ஏன் நீங்களே ஒரு காலத்தில் இது போன்ற சித்த தன்மை அடைந்து மற்றவர்களை வாழ்த்துகின்ற பாக்கியம் கூட கிடைக்கும். அந்த பெருமையையும் அகத்தியன் நான் போராடி வாங்கித் தருகிறேன்.
சித்தன் அருள்........... தொடரும்!