வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
பொதிகையை அகத்தியப்பெருமானுக்கு தாரை வார்த்து அங்கேயே இருந்து கொள்ளும்படி ஆசிர்வதித்தது சிவபெருமான் என்பது தெரிந்திருக்கும்.
அப்படிப்பட்ட பொதிகையை பிற மதத்தவர்கள் கையடக்கி அவர்கள் வழிபாட்டு ஸ்தலமாக மாற்ற முயன்ற பொழுது, ஒரு சில நல்ல மனிதர்களின் முயற்சியால், அகத்தியப்பெருமானின் சிலை 1970-71இல் நிறுவப்பட்டது. அந்த சிலை இப்பொழுது இல்லை எனினும், அந்த நிகழ்ச்சி சம்பந்தமாக கிடைத்த இரு புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சிறிய சிலையாக இருந்தாலும், மிக அழகாக வடிவமைக்கப்பட்டதும், இன்றும் எங்கும் காண முடியாத அழகுடன் இருப்பதை கவனியுங்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...........தொடரும்!