சூரத் சத்சங்கம் பாகம் 11
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!
சூரத் நகரில் காலபைரவர் சன்னதியில் நடந்த குருநாதருடைய சத் சங்கத்தில் ஒரு.... நிலம் வீட்டுமனைகள் வாங்கி விற்கும் தரகு தொழில் செய்யும் ஒருவரும்.... அவருடன் சேர்ந்து ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கும் அதாவது வீடு கட்டுவதில் சில தடை தாமதங்கள் ஏற்பட்டு மேற்கொண்டு வீட்டுப் பணியை தொடர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒருவரும் குருநாதரிடம் நல் உபதேசம் பெற வந்து அமர்ந்தனர்.
நில புரோக்கர் அவர்கள் என்னுடைய தொழில் சரிவர நடப்பது இல்லை பணம் தங்குவதே இல்லை!!!! என்னுடைய தொழில் முன்னேற்றத்திற்கும் பணவரவிருக்கும் தீர்வு குருநாதர் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அதற்கு நம் குருநாதர்!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய அதாவது உன்னுடைய சொத்தை அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியப் புரிய அப்பனே அதாவது பின் உன் இல்லத்தில் அனைவரும் இருக்கின்றார்கள் அப்பனே நிச்சயம் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்பனே சொத்து விற்கப்படுகின்றது அப்பனே அப்பொழுது எவ்வளவு மனம் நொந்தும் அப்பனே!!!!
அதே போலத்தான் அப்பனே பலர் பலர் நொந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!!
அதை போய் இப்படி ஆகவில்லை என்று கூறிவிட்டால் அப்பனே இவையெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய மாறிவரும் அப்பா!!!
அப்பனே முன்னோர்களுடைய எதை என்று அறிய அறிய அதாவது கஷ்டத்திற்காகத்தான் அனைவருமே இப்படி செய்கின்றார்கள் அப்பனே!!!
அவ் கஷ்டங்கள் கூட உன்னை சிறிதளவு தாக்குகின்ற பொழுது அப்பனே பின் குடும்பத்தில் கூட சில பிரச்சனைகள் அப்பனே எவை என்றும் அறிய அறிய அதனால் தான் அப்பனே பின் இவை செய்யும் பொழுது அப்பனே பின் நன்றோ பின் கெடுதலோ அப்பனே நிச்சயமாய் அப்பனே தானங்கள் செய்ய வேண்டும் அப்பனே!!! அவை நீ செய்யவில்லையே அப்பனே!!
முதலில் செய் அப்பனே நிச்சயம் மாற்றம் அடையும் வாழ்க்கை அப்பனே!!!
(நிலம் மற்றும் வீடுகள் வாங்கி விற்கும் தரகர்கள் அதாவது ஒருவருக்கு மிகுந்த கஷ்டம் வரும் பொழுது தான் அவர்களுடைய பூர்வீக நிலத்தையோ அவர்களுடைய வீட்டையோ இருப்பார்கள் அவர்கள் மனம் நொந்து தங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் என்று விற்கும் பொழுது கூட அதாவது முன்னோர்களுடைய நிலம் சொத்து இவற்றை விற்கும் பொழுது கூட மனம் சங்கடப்பட்டு நிற்பார்கள்!!! அதை இடையில் வாங்கி விற்பது போன்ற பணியில் ஈடுபடும் பொழுது அவர்களுடைய மனக்கஷ்டம் வந்து இந்த செயலை இந்த தொழிலை செய்பவர்களுக்கு தாக்கும்.
நல்லதோ கெட்டதோ ஆனால் இந்த பணியை செய்து வருபவர்கள் அதில் கமிஷன் தொகையாக லாபமும் பார்க்கின்றார்கள்!!! ஆனால் அதில் தான தர்மங்கள் செய்ய வேண்டும் இயலாதவர்களுக்கு உதவிகள் புரிய வேண்டும் அப்படி செய்தால் தான் விற்பவர்கள் மனக்கஷ்டம் நம்மை தாக்கவும் செய்யாது தொழிலும் நன்றாக இருக்கும் குடும்பத்திலும் பிரச்சினைகள் வராது!!!
குருநாதர் உடைய வாக்குகளில் அடிப்படை செயல் என்னவென்றால் தான தர்மங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்வது இதை தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் மனிதனுக்கு கஷ்டங்கள் என்பதே வராது)
அப்பனே!!! இறைவன் கொடுக்கின்றானப்பா ஆனால் பேராசைகளப்பா மனிதர்களுக்கு!!!
அறிவுகள் கூட இறைவன் பலமாகவே மனிதர்களுக்கு கொடுத்து இருக்கின்றான் ஆனால் உபயோகப்படுத்துவதே இல்லை அப்பனே!!! சிறிய பங்கு அப்பனே இயலாதவர்களுக்கு அப்பனே ஏதாவது செய்யலாம் என்று நினைத்து விட்டால் அவ் பணம் தங்குமப்பா!!!!.... இல்லையென்றால் அப்படியே சென்று விடும்!!!
அனைத்து மக்களுக்கும் இதை தெரிவிக்கின்றேன் அப்பனே!!!
(இங்கே இறையருள் மூலம் தான் அனைத்தும் நடக்கின்றது தொழிலும் வருமானமும் அனைத்தும் ஆனால் மனிதர்களுக்கு இவையெல்லாம் சரியாக நடக்கும் பொழுது அதில் ஒரு பங்கையாவது இல்லாதவர்களுக்கு தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொண்டால் தான் பணமும் தங்கும் இல்லையென்றால் அப்படியே சென்று விடும்)
வீடு கட்டுமான தடையால் வந்திருந்த நபரும் குருநாதரிடம் தீர்வினை கேட்க!!!!
அப்பனே முன்னோர்களை நினைத்துக் கொண்டு அன்னத்தை இயலாதவர்களுக்கு அளித்து வா அப்பனே!!!
அதுமட்டுமில்லாமல் அப்பனே புண்ணிய நதிகளில் இருக்கும் மண் கற்களை கூட எடுத்து வந்து இல்லத்தை அமைக்கும் பொழுது அப்பனே அதனோடு சேர்த்து அமைத்தால் அப்பனே நல் ஆசிகள் கிடைக்கும் அப்பா!!!!
ஆனால் அப்பனே மனிதர்களுக்கு கஷ்டம் என்பது குறைவதே இல்லை அப்பனே எதை என்று கூட எதனால் கஷ்டம் வருகின்றது என்றால் அப்பனே மனிதன் வாழத் தெரியாமல் வாழ்ந்து எதனை செய்ய வேண்டும் என்பதை கூட செய்ய தெரியாமல் செய்து வருகின்றான் அப்பனே!!!!
இல்லத்தை அமைக்கும் போது அப்பனே முன்னோர்கள் ஆசியையும் அப்பனே தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொண்டால் தான் அப்பனே மனிதன் வாழ்க்கையில் தடை தாமதங்கள் இல்லாமல் அனைத்துமே நடக்குமப்பா!!!!
அசைவ உணவுகளை எடுத்துக்கொண்டு ஒரு உயிரைக் கொன்று சமைத்து உண்டு தன் இஷ்டத்திற்கு ஏற்ப அனைத்தும் நடந்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் எப்படி நடக்கும் அப்பா???
எந்த ஒரு நற்காரியத்தை செய்ய வேண்டும் என்றாலும் அப்பனே இறைவனுடைய ஆசிகளும் முன்னோர்களோட ஆசைகளையும் பெற வேண்டும் அப்பனே தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் எந்த ஒரு உயிர் வதைத்தலும் செய்யக்கூடாது அப்பனே!!!! அப்படி செய்து கொண்டு இவையெல்லாம் நடந்தேறும் என்று எதிர்பார்த்தால் தரித்திரமப்பா!!!!!!
(வீடு கட்டும் அல்லது வீடு கட்ட நினைக்கும் அடியவர்கள் முன்னோர்கள் நினைத்து தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் அசைவ உணவு பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்!!!
வீடு கட்டுமான பணியின் போது புனிதமான நதிகளில் ஆறுகளில் இருக்கும் கற்கள் மண்ணை எடுத்து வந்து கட்டுமான பொருட்களோடு கலந்து வீடு கட்டும் பணியை செய்ய வேண்டும்.)
அப்பனே எதை என்று கூட மணச்சநல்லூர் (திருச்சி) இங்கிருக்கும் மண்ணை அங்கு வைத்து விடு!!! அங்கு இருக்கும் மண்ணை இங்கு எடுத்து வா!!!!
அங்கும் எதை என்று அறிய அறிய அப்படியே எவை என்று அறிய அறிய பிரம்மபுரி எவை என்று அறிய அறிய சென்று வா அப்பனே அதாவது இப்பொழுது எதை என்று அறிய அறிய பிரம்மனின் திருத்தலம் என்று பின் கூறப்படுகின்றது!!!(திருப்பட்டூர்)
யான் கூறியதை செய்திட்டு வா அப்பனே.... நல் மாற்றங்கள் உண்டாகும் அப்பனே!!!
(வீடு நிலம் இவற்றில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் திருச்சி மணச்சநல்லூரில் இருக்கும் பூமிநாதர் ஆலயத்திற்கு சென்று எங்கிருந்து செல்கின்றோமோ தம்முடைய நிலத்தின் அல்லது வீட்டின் மண்ணை எடுத்துக்கொண்டு அங்கு சென்று வைத்துவிட்டு அந்த ஆலயத்தில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொண்டு வந்து நம்முடைய இடத்தில் வைத்து வணங்கி வழிபட்டு வர வேண்டும்!!!! இந்த ஆலயத்திலேயே மண்ணை எப்படி வைத்து வழிபடுவது ஆலயத்தில் கடைபிடிக்க வேண்டிய சம்பிரதாய முறைகள் என்ன என்பதை பற்றி ஆலயத்திற்கு உள்ளே அறியலாம் ஆலய நிர்வாகிகளும் ஆலய அர்ச்சகர்களும் இதற்கு உதவுவார்கள் எப்படி செய்ய வேண்டும் என்ற முறை அந்த ஆலயத்தில் பிரதானமாக உள்ளது இதை செய்ய விரும்புபவர்கள் ஆலயத்தை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெற்றுக் கொள்வது நலம்)
இதில் அடியவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் குருநாதர் கூறும் இந்த உபதேசங்கள் அனைவருக்கும் பொதுவாக நடக்க நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் முதலில் புண்ணியங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும்!!!!
முடிந்தவரை இயலாதவர்களுக்கு வாயில்லா ஜீவராசிகளுக்கு கோமாதாக்களுக்கு பைரவர்களுக்கு முடிந்தவரை தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை பெருக்கிக் கொண்டால் மட்டுமே குருநாதருடைய வழிகாட்டுதல் படி தடை தாமதம் இன்றி அனைத்தும் நடக்கும்!!!!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில், பூமி சம்பந்தமான அனைத்துவிதமான குறைபாடுகளிலிருந்தும் தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.வீடோ, மனையோ, நிலமோ பிரச்னை இல்லாமல் அமைய வீடு கட்டும் யோகம், வீட்டு எண் யோகம், வீடு, மனை, நிலம் தோஷங்கள், பிரச்னைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நீக்கி, யோகமான வீடு, மனை, நிலம் அமைய, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரிலுள்ள அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் மண் வழிபாட்டு முறை செய்து, சுவாமி மற்றும் அம்மனை வழிபட்டால் பலன்கள் அனைத்தையும் பெறலாம்.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலில் நடை திறந்திருக்கும். நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜை விசேஷமானது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூர் அமைந்துள்ளது. மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்தும், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், நெ.1 டோல்கேட், நொச்சியம் வழியாகத் திருக்கோயிலை வந்தடையலாம்.
அருள்மிகு வள்ளி, தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முசிறி, சிறுகாம்பூர் வழியாக நொச்சியம் வந்து, அங்கிருந்து மண்ணச்சநல்லூர் செல்லலாம்.
கரூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சத்திரம் பேருந்து நிலையம், நெ.1டோல்கேட், நொச்சியம் வழியாகச் செல்லலாம்.
சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் போன்ற வட மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சமயபுரத்தில் இறங்கி அங்கிருந்து சிற்றுந்து மூலமாக வரலாம். அல்லது நெ.1.டோல்கேட் வந்து நொச்சியம் வழியாகவும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயிலை வந்தடையலாம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர், ஆத்தூர், உப்பிலியபுரம், தம்மம்பட்டி போன்ற ஊர்களுக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகளிலும், மண்ணச்சநல்லூர் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகளிலும் கோயிலுக்கு வரலாம். கார், வேன் மூலமாக வருபவர்கள் இதே வழியில் வரலாம். ரயில், விமானம் மூலம் வருபவர்களுக்கு ரயில் மற்றும் விமான நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வருவதற்கு உரிய வசதிகள் உள்ளன.
பிரம்மபுரீஸ்வரர் கோயில்
பிரம்மபுரீஸ்வரர் கோயில் அல்லது அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பத்தூரில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 30 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் பிரம்மா கோவில், தலையெழுத்தை மாற்றும் கோவில் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 07.30 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 12.30 வரை கோவில் திறந்திருக்கும்.
கோவில் முகவரி :
ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவில்,
திருப்பட்டூர், மணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம் - 621105
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!