Quantcast
Channel: அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
Viewing all articles
Browse latest Browse all 1974

சித்தன் அருள் - 152 - நம்பிமலை!

$
0
0
[நம்பிமலை கோவில்]
[வணக்கம்! நிகழ்ச்சிகளை, ஒருவர் வாழ்வில் வந்த கர்ம வினையை அகத்தியர் எப்படி பரிகரங்கள் வழி கரைத்து தருகிறார் என்பதை படித்து வந்த பலருக்கும், சமீப காலமாக "சித்தன் அருளில்"வருகிற கோடகநல்லூர், நம்பி மலை தொடர் வித்யாசமாக இருந்திருக்கும். ஆச்சரியம் இல்லாமல், ஒரு சில அகத்தியர் சொன்ன விஷயங்கள் மட்டுமே வருகிறதே என்று எண்ணலாம். ஒரு பெரியவர் (அகத்தியப் பெருமான்) ஒரு விஷயத்தை சொல்கிறார், அது குறிப்பிட்ட நேரத்தில் வெளி வருகிறது என்றால், ஒன்றை உணர வேண்டும். இந்த "சித்தன் அருள்"தொகுப்பை நான் வழங்கவில்லை. எல்லா வாரமும் தொகுப்பை வழங்கியவுடன் அப்படியே அதை அவர் பாதத்தில் "எல்லாம் உங்கள் செயல். அனைத்துப் பெருமையும் உங்களையே சாரும்"என்று சொல்லிவிடுகிறேன். அதனால், அவர் என்ன இந்த வாரம் சொல்ல நினைக்கிறார், யாருக்கு சில தகவல்கள் போய் சேரவேண்டும் என்று நினைக்கிறார் என்பதை அடியேன் யான் அறியேன். இருந்தும் ஒரு சிலர் தங்கள் மனதில் இருந்த கேள்விக்கு இதில் விடை கிடைப்பதாக சொல்கின்றனர். மிக்க மகிழ்ச்சி. எல்லோருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் எதிர்பார்த்த மாதிரி தொகுப்பு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு சில செய்திகள் நம்மை வந்து சேரவேண்டியது அதில் அகத்தியர் அருளால் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். எது அது என்பதை இனம் பிரித்து பார்த்துக் கொள்ளவேண்டியது, அவரவருக்கு விதிக்கப்பட்டது. இனி சித்தன் அருளை தொடருவோம்.]     

ஆகவே, இறைவன் விண்ணிலிருந்து வந்தவன். விஸ்வரூபம் காட்டியவன். அப்படிப்பட்ட இறைவன் அடக்கத்தின் காரணமாக தன்னை குறுக்கி கொண்டவன். தன்னை குறுக்கிக் கொண்டு, தன்னை தேடி வரும் அனைத்து பக்தர்களை அரவணைத்து, அவர்கள் கூறுவதை குனிந்து கேட்டான் அல்லவா, அதற்குத்தானடா குறும்குடி என்று பெயர். யாரோ கேட்டார்களே "குறும்குடி"என்னவென்று. இப்போது விளக்கம் சொல்லிவிட்டேன், போதுமா?

வேறு என்ன வேண்டும்? அனைவரும் வாய் திறந்து கேட்கலாம். அகத்தியன் மட்டுமல்ல, அத்தனை சித்தர்களும், இன்றைக்கு அற்புதமாக இருக்கிறார்கள். எதை வேண்டுமானாலும் கேளுங்கள். அகத்தியன் வாய் திறந்து பேசுகிறேன். மங்களம் உண்டாகட்டும். வாய் திறக்கட்டும். அகத்தியனிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். எந்த வித்யாசமின்றியும் கேட்கலாம். ஆக, அகத்தியன் கூறுகின்ற பதில் உனக்கு மட்டுமல்ல! அத்தனை தெய்வங்கள் காதிலும் விழப்போகிறது. இன்னும் தெய்வங்கள் இங்கிருக்கிறது. ஆகவே, வாய் திறந்து கேட்கட்டுமே, என அருளாசி.

{அவர் தான் பச்சை கொடி காட்டிவிட்டாரே! இருக்கும் இடத்திலிருந்து மனம் திறந்து கேட்டு, எப்போது வேண்டுமானாலும் அவர் அருளை பெற்றுக் கொள்ளுங்கள். இது அன்று கூறியதாயினும், நமக்கு, இது என்றும் பொருந்தும் என்று, சொல்லாமல் சொல்கிறார்.}

அன்னவன் 1814 ஓலைச்சுவடிகளை படிக்க 8 ஜென்மம் எடுத்தாலும் முடியாது. ஏன் என்றால், போகன் ஒரு ஓலைச்சுவடியிலே 70 நோய்களுக்கு மருந்து சொல்லியிருக்கிறான். நீங்கள் கேள்விப்படாத நோய்களுக்கு எல்லாம் மருந்து இருக்கிறது. இன்னும் 90 ஆண்டுகளில் வரப்போகிற 947 வியாதிகளுக்கும் மருந்திருக்கிறது. அத்தனை வியாதிகளும் புதுப்புது வியாதிகளடா! கேள்விப்படாத வியாதிகள். மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள். எந்த மிலேச்சன் நாட்டுக்கு சென்றாலும் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள். மனிதனுக்கு வரப்போகிற அத்தனை வியாதிகளுக்கும் தேவையான மூலிகை இங்கு இருக்கிறது. திருக்குறும்குடியில், அதற்குரிய மூலிகை இருக்கிறது. இது மிக ரகசியம். அதை அடையாளம் காட்ட மாட்டேன் இப்பொழுது. தகுந்த சமயத்தில், தகுந்த நேரத்தில், தகுந்த மருந்தினை அடையாளம் காட்டுவேன். அது மட்டும் உண்மை. ஏன் என்றால், இது தெய்வீக ரகசியம் தான். இது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் அகத்தியன் யாம் அதை பற்றி கவலைப் படப்போவதில்லை. ஏன் என்றால், எத்தனை நாளுக்குத்தான் தெய்வீக ரகசியம் என்று இதை மறைத்து வைப்பது. மனித குலத்துக்குப் போய் சேரவேண்டாமா? ஆகவேதான், இந்த நல்ல நாளில், முக்கண்ணன் இடம் கேட்டுக் கொண்டேன். யாருக்கும் மரணத்தை சீக்கிரம் கொடுத்துவிடாதே. அவர்களுக்கு வர வேண்டிய நோய்கள் வந்தால், அகத்தியனை நோக்கி பிரார்த்தனை செய்யட்டும். அகத்தியன் போகனை நாடுவான். போகனும் இதோ இருக்கிறான். போகன் உண்டாக்கிய மருத்துவ மூலிகைக்கு உயிர் வேண்டும். அந்த மூலிகைகள் மொத்தம் 17. 17 மூலிகைகளும் மிக அற்புதமானவை. இரவிலே ஒளி வீசும். பகலிலே, சுருங்கி இருண்டு கிடக்கும். ஆக ஒவ்வொரு இலைகளுக்கும் ஒவ்வொரு இரும்பு தன்மை உண்டு. ஒவ்வொரு இலைகளின் நரம்புகளுக்கும், ஒவ்வொரு வியாதியை குணப்படுத்தும் குணம் உண்டு. மனித உடலில் நடுவில் ஓடுகின்ற முதுகு தண்டுபோல், இலையில் நடுவில் ஓடும் நரம்புத் தண்டை மூன்றாக வெட்டி எடுத்துக் கொடுத்தால், காச நோய் உடனே நிற்கும். அதன் கடைசி பாகத்தை வெட்டி எடுத்துக் கொடுத்தால், கண் நோய் விலகும். அதன் முதல் பாகத்தை வெட்டி எடுத்துக் கொடுத்தால், வயிறு சம்பத்தப் பட்ட, குடல், கணையம் சம்பத்தப் பட்ட நோய் உடனே நிற்கும். ஒரு இலைக்கே இத்தனை செய்திகள் இருக்கிறதென்றால், அந்த மரத்துக்கு எத்தனை செய்திகள் இருக்கும். 

அந்த மூலிகைகள், இந்த அற்புதமான திருக்குறும்குடியில் இருக்கிறது. சதுரகிரி மலையிலும் இருக்கிறது. 15 ஆண்டுகள் தான் நான் தவணை தருவேன். அதற்குள், இந்த மூலிகைகள் பக்குவம் பெற்று, மக்களை சென்று சேர வேண்டும். அதற்குப் பிறகு, இந்த மூலிகைகள் குன்றி, அழிந்து விடும். அகத்தியன் எத்தனை நாளுக்குத்தான் தெய்வ ரகசியம் என்று இந்த மூலிகை ரகசியங்களை வைத்துக் கொள்வது. 

போகா என்ன சொல்கிறாய் என்று அவனை கேட்கிறேன். 

"தலையாய சித்தனே! இட்டதொரு கட்டளை
செய்யவே பிரார்த்திக்கிறேன் நான்"என்கிறான்.

மங்கோலியா நாட்டிலே நான் பிறந்தாலும், எனக்கு தலைவன் நீ தானடா. நீ உரைத்து, என்றைக்காவது நான் எதிர்த்துப் பேசி இருக்கிறேனா? தலை வணங்கித்தான் செய்திருக்கிறேன். ஆகவே, அகத்தியா, நீ எதை செய்தாலும், போகனுக்கு ஏற்புடா!

இந்த ஒலைக்கட்டில், யாருக்கும் கிடைக்காத மூலிகை ரகசியங்கள் எல்லாம், பூ உலகத்தில், பாரத மண்ணிலே பிறந்த எந்த மானிடனுக்கும் கிடைக்காத ரகசியங்கள் எல்லாம் எழுதி இருக்கிறேன்.

"அன்றொருநாள், ஆங்கொருவன், பத்து லட்சத்துக்கு விலை கூறி கேட்டானே ஒருவனிடம்; கொடுத்தானா இவன்? அன்றைக்கே பணம் சம்பாதித்திருக்கலாமே? விட்டானா? கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், அந்த ரகசியங்கள் அழிந்து தூள் தூளாகி இருக்கும். கொடுத்திருந்தால், மிலேச்சன் நாட்டுக்கு இது போய், எல்லா நோய்களுக்கும் மருந்தை கண்டுபிடித்த பெருமையை மிலேச்சன் நாட்டுக்காரன் எடுத்திருப்பான். கொடுக்கவில்லை. அப்போதே போகனை தக்கவைத்துக் கொண்டு, இன்று உன் சொல்லுக்கு அடிபணிந்து இருக்கிறான். ஆகவே, அகத்தியா! நீ என்ன சொல்கிறாயோ, அந்த வார்த்தைக்கு தலை வணங்குகிறேன்", என்று போகன் உரைக்கிறான்.

இப்பொழுது, போகனே, எனக்கு ஆனந்தமாக அனுமதி தந்துவிட்டான். அதனால் அந்த போகன் நாடியை, அன்னவனுக்கு இந்த நல்ல நாளில் கொடுத்துவிடு. இப்பொழுது சந்திராஷ்டமம் இல்லையே. கணக்குப் பண்ண வேண்டாமே. அப்படி ஒரு அற்புத நிகழ்ச்சி நடக்கிறதல்லவா? ஆகவே, சந்திர அஷ்டமம் எல்லாம் தாண்டிவிட்டது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும். இப்போதே பெற்றுக்கொள், வைத்துக்கொள். சகல விதமான ஔஷத பாக்கியங்களும் கிடைக்கட்டும் என்று அகத்தியன் சொல்கிறேன்.  அவ்வப்போது நட்சத்திர மரங்களையும் மட்டுமல்ல, இன்னும் சில ரகசியங்களை சொல்கிறேன். அகத்தியன் மைந்தன் வழி சொல்கிறேன். அதை பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் காக்க நீ உதவ வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனே உன்னை படைத்திருக்கிறான். இல்லை என்றால் தொழில் மாறியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் வாழ்க்கையை வேறு விதமாக கொண்டு போயிருக்கலாம். அன்று அகத்தியன் சொன்னேன் "வெளியே வா"என்று. எந்த நம்பிக்கையில் வெளியே வந்தாய். யாரை கேட்டு வெளியே வந்தாய் என்று கேட்டவர்கள், உனக்கு பைத்தியக்காரன் பட்டம் சூட்டியதெல்லாம் எனக்குத் தெரியும். முட்டாள் பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறான், என் எதிரில் இருக்கின்ற அன்னவன், என்பது எனக்குத் தெரியும். பொல்லாத பணி செய்துவிட்டாய், செய்து வந்த பணியை இழந்து நிற்கிறாய், இது நியாயமா என்று, எத்தனை நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் அடி வயிற்றில் எரிந்துகொண்டு, முட்டாள்தனம் செய்கிறானே இவன், இவனுக்கு என்ன பைத்தியமா பிடித்துவிட்டது என்று பேசி கொள்வதெல்லாம், அகத்தியன் காதில் விழத்தாண்டா செய்கிறது. அதை எல்லாம் தாண்டி, அகத்தியன் சொன்னான் என்பதற்காக வேலையை விட்டு வந்திருக்கிறானே இவன். இவனுக்கு அகத்தியன் ஏதாவது நன்றிக் கடன் செய்யவேண்டும். இந்த பணியை இவன் ஏற்பான். இவனால், இந்த உலக மக்களுக்கு, யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறதோ, அந்த மனிதர்களுக்கு, இந்த பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். மருந்து தான் இப்போது உயிரை காக்கும் தெய்வம். மனதை காக்க என்னதான் யோகா இருந்தாலும், த்யானம் இருந்தாலும், அதை எல்லாம் தாண்டி, இந்த மருந்து வேலை செய்யும். அப்படிப் பட்ட மருந்தை, யாருக்கும் கிடைக்காத மூலிகையை, இன்றே தந்தேன் என்று அருளாசி.

நாடியை படித்து நிமிர்ந்த போது என் நண்பர்கள் அமைதியாக இருந்தனர். நான் கூறலானேன்.

"இந்த நாள் வரலாற்றிலேயே மிக முக்கியமாக குறிக்கப் படவேண்டிய நாள்.இன்று அகத்தியப் பெருமான் நல்ல குஷி மூடில் இருக்கிறார். வேறு ஏதாவது சொல்கிறாரா என்று பொறுத்துப் பார்ப்போம்"என்றேன்.

சித்தன் அருள்.......... தொடரும்! 

Viewing all articles
Browse latest Browse all 1974

Latest Images

Trending Articles


71வது சுதந்திர தினம் நற்பண்புகளால் இந்திய நாட்டை கட்டி எழுப்புவோம் : கவர்னர்,...


Kamal: கமலுடன் போட்டோ வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்: ரசிகர்கள் எதை ஜூம் செஞ்சு...


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


என்னை இயக்கி செக்ஸ்


கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>