"சத்தியமும், அறமும், இறை பக்தியும் விடாது தொடர, வினைப்பயன்கள் படிப்படியாய் குறைந்துவிடும். வினைகள் குறைய, மனப்பாரம் குறையும், நலமும், சாந்தியும் சேரும். எகுதொப்ப, எவன் விளம்பினாலும் அது குறித்து விசனங்கள் உனக்கு வேண்டாமப்பா. எதிர்ப்புகள், ஏளனங்கள் கண்டாலும், நலம் செய்வதை நிறுத்த வேண்டாம். புத்தி சொல்லி திருந்தவில்லை என்றால், "அவன் விதிப்படி வாழட்டும்"என்று யாங்கள் விட்டுவிடுவோம். அறம், சத்தியம், இறை பிரார்த்தனையை விடாமல் தொடர்ந்து வருவோர்க்கு, யாம் "உன் அருகில் இருப்போம்". - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
↧