Quantcast
Channel: அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
Viewing all articles
Browse latest Browse all 1976

சித்தன் அருள் - - அந்தநாள் >>இந்த வருடம் 2017 >>பாபநாசம்!

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எல்லோரும் நலமாக வாழ்க என்பதன்றி வேறொன்றும் இங்கு பிரார்த்தனை இல்லை. இன்று, வியாழக்கிழமை அன்று தர வேண்டிய தொகுப்பை தயார் பண்ண முடியவில்லை. ஒருவாரமாகவே மிகுந்த அலைச்சல். இருக்கிற பிரச்சினை போதாதென்று, நேற்று வருண பகவானும் நிறையவே ஆசிர்வாதம் பண்ணப்போக, முழுவதும் நனைந்த பறவையாக வீடு வந்து சேர்ந்தேன். தட்டச்சு செய்ய, மனம் ஒன்று படவில்லை. தொகுப்பு வெளியிட முடியவில்லை.

எப்போதும் போல, அகத்தியர் கோவிலுக்கு மாலை சென்ற பொழுது, முதலில் அனைத்துப் பெருமைகளையும் அவர் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு, நன்றியை கூறி, கூடவே "இன்று ஏன் தொகுப்பை வெளியிடமுடியாதபடி சூழ்நிலை அமைந்துவிட்டது?"என்ற கேள்வியை சமர்ப்பித்தேன்.

சென்ற நேரம், அவருக்கு நிவேதனம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், சன்னதி பக்கம் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு உண்டு. ஆகவே, அவர் சன்னதிக்கு நேர் எதிரே அமர்ந்து, பூசை முடியும் வரை, கண்மூடி, த்யானத்தில் அமர்ந்தேன். ஏதோ தோன்ற, அவர் லோக ஷேமத்துக்காக அளித்த, "ஆதித்ய ஹ்ருதயம்"சுலோகம் தானாகவே உள்ளிருந்து வந்தது. கண் மூடி, அவர் பாதத்தை சுழி முனையில் அமர்த்தி, சுலோகத்தை உருப்போட, உடல் மிக எளிதாக மாறியது. திடீரென ஒரு உத்தரவு தெளிவாக கேட்டது.

"மார்கழி மாதம் பாபநாச ஸ்நானம் செய்து, சிவபெருமானை தரிசித்துவர, எம் சேய்களுக்கு தெரிவித்துவிடு"என்று வந்தது.

முன்னரே இதை பற்றிய செய்தியை "அந்தநாள் >> இந்த வருடம் >> 2017"என்கிற தலைப்பில் சித்தன் அருள் வலைப்பூவில் தெரிவித்திருந்தேன். உங்கள் அனைவருக்கும் அதன் முக்கியத்தை நினைவூட்டுவதற்காக ஒரு முறை கூட இந்த தொகுப்பில் தெரிவிக்கிறேன்.

"பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து"அப்படியே ஆகட்டும்"என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2017 முதல் 13/01/2018க்குள் வருகிறது."

குறிப்பிட்ட நாளை கூறாமல், 29 நாட்களை அளித்து அருளை அள்ளிச்செல்ல அகத்தியப் பெருமான் வழி காட்டுகிறார்.

அவரவர் வசதிப்படி, 16/12/2017 முதல் 13/01/2018க்குள் ஒரு நாள் சென்று பாபநாசத்தில் தாமிரபரணி நதியில்  (கோவில் முன் உள்ள படித்துறையில்) ஸ்நானம் செய்து, பின் இறைவனையும் அம்பாளையும் தரிசித்து, விண்ணப்பத்தை சமர்ப்பித்து, அருள் பெற்று வாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அங்கு செல்பவர்கள், அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரில் இருக்கும் உரலில் மஞ்சளை போட்டு (அதுவும் அங்கேயே இருக்கும். வாங்கி செல்ல வேண்டும் என்பதில்லை!) இடித்து, அங்கு வருபவர்களுக்கு அளித்து, சிறிது பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு செல்லும் படியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொல்லச்சொன்னதை தெரிவித்துவிட்டேன். அடியேன் வேலை முடிந்தது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!

அக்னிலிங்கம்!

Viewing all articles
Browse latest Browse all 1976

Latest Images

Trending Articles


Operation Mekong (2016) Tamil Dubbed Movie HD 720p Watch Online


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு - ஆதி வெங்கட்


திருச்சி அன்னை ஆசிரமத்தில் … …


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1004 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!


ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


சிஎம்டிஏ அதிகாரிகளுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை...!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


ஆசியாவின் மிகப் பெரிய விநாயகர்!



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>